A A A

Museum

Vallal Dr. Alagappar Museum

Alagappa University has established a museum in living memory of its matchless founder Vallal RM. Alagappa Chettiar who opened the gates of learningto the rural masses living at and around Karaikudi by the establishment of a number of educational institutions.

This museum houses different memorabilia such as objects of Alagappar's personal use, snapshots of his childhood memories, photographs of the members of his family and educational institutions and industries established by him and also rare pictures of his meeting with the great leaders.The museum also depicts several charitable projects initiated by VallalAlagapppar such as hospitals, hostels and similar other institutions catering to the needs of the people.

There is a mini theatre with facility to screen a documentary film portraying the humanitarian measures and selfless services of Alagappar for the uplift of the people at the lower strata of the society in addition to his laudable achievements during various stages in his career graph.

The museum, with its virtual highlights, leaves a sweet memory in the minds of the visitors.

 

வள்ளல் டாக்டர் அழகப்பர் அருங்காட்சியகம்

அழகப்பா பல்கலைக்கழகம் கிராமப்புற மக்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்வேறு கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்த ஒப்பற்ற நிறுவனர் முனைவர் வள்ளல் ராம. அழகப்பச் செட்டியார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வருங்காட்சியகம் வள்ளல் அழகப்பரின் நினைவாக அவர் பயன்படுத்திய பல்வேறு பொருட்கள், வள்ளலின் குழந்தைப்பருவம், அவர் தம் குடும்ப உறுப்பினர்களின் நிழற்படங்கள், அவர் தோற்றுவித்த நிறுவனங்கள், சந்தித்த சிறந்த தலைவர்கள், அவரது அருட்கொடைகளான மருத்துவமனைகள் மற்றும் மாணவர் விடுதிகள் போன்றவற்றை நினைவுபடுத்தும் நிழற்படங்கள் பலவற்றைக் கொண்டுள்ளது.

மேலும், கல்விக் கொடைக்காகவே செல்வம் ஈட்டிய இம் மாமனிதரின் தன்னிகரற்ற சேவை, வள்ளல் தன்மை, தன்னலமற்ற சேவை, மனித சமுதாயத்தினை மேம்படுத்த அவர் கொண்ட ஈடுபாடு, அவரது பல்வேறு கொடைகள், வாழ்வில் பல நிலைகளிலும் அவர் பெற்ற சாதனைகள் இவற்றைப் பறைசாற்றும் வண்ணம் குறும்படம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. காண்போரைக் கவரும் வகையில் ஓர் அழகிய திரையரங்கினையும் இவ்வருங்காட்சியகம் கொண்டுள்ளது.