1985 ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது நிறுவப்பட்ட நான்கு துறைகளில் தமிழ்த் துறையும் ஒன்று. இத்துறை நிறுவப்பட்டது முதல், பேராசிரியர்கள் வ.சுப.மாணிக்கனார், பேராசிரியர் இரா. சாரங்கபாணி, தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் ஆகியோரின் சிறந்த புலமை மரபைக் கடைப்பிடித்து வருகிறது.
தமிழ்த்துறையின் முதல் துறைத்தலைவர் பேராசிரியர் கு. சிவகுருநாதன். அவருக்குப் பிறகு பேராசிரியர் அ. விசுவநாதன், பேராசிரியர் தே. சொக்கலிங்கம், பேராசிரியர் இரா. பாலசுப்ரமணியன், பேராசிரியர் மு. பாண்டி ஆகியோர் துறைத் தலைவர்களாக விளங்கினர். பேராசிரியர் வெ. சு. அழகப்பன், பேராசிரியர் இராம. இராமநாதன் பேராசிரியர் இரெ. பிச்சைக்கண்ணு ஆகியோர் சிறப்பாகப் பணியாற்றி, துறையிலிருந்து பணிநிறைவு பெற்றனர்.
Profile
Professor
Associate Professor
Assistant Professor
Teaching Assistant
Thirukkural Research Centre MOU with Pertubuhan, Tamil Kapagam, Malaysia,for Promote Thirukkural and Tamil Language development.
அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் மாணவர் மன்றம் ஆண்டுதோறும் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மாணவர் மன்றத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, பொங்கல்விழா, கலைமகள் விழா, ஆசிரியர் தினம், மகளிர் தினம் போன்றவை கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியும் மாணவர் மன்றம் சார்பில் நடத்தப்பெறுகின்றது. அதுபோல, ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் நிறைவாண்டு மாணவர்களுக்கு விடைகொடு விழாவும் மாணவர் மன்றம் சார்பில் நடத்தப்படுகின்றது. ஆண்டுதோறும் கல்விச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா ஆகியவற்றிலும் மாணவர் மன்றத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்த்துறையில் நடைபெறும் வியாழ வட்டம், அறக்கட்டளைச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் போன்றவற்றிலும் மாணவர் மன்றம் ஒருங்கிணைப்புப் பணிகளில் முனைந்து ஈடுபடுகிறது.
அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பயின்ற மாணவர்கள் வெளிநாடுகளிலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்களிலும் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடக நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பைத் தேடிக் கொள்ளும் திறன் பெற்றவர்களாக உருவாக்கப்படுகிறார்கள்.
©2023 Alagappa University, Karaikudi, Tamilnadu
Website Designed and Maintained by MIS, Alagappa University